இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,933 பேர் கொரோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,40,215 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 14,933 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 312 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 14,011 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2,48,190 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 1,78,014 பேர் சிகிச்சை பெற்று […]
