சிம்மம் ராசி அன்பர்களே, இன்று தைரியத்துடன் செயல்பட்டு சாதனை படைக்கும் நாளாகவே இருக்கும். சங்கிலித் தொடர் போல வந்த கடன் பிரச்சனை குறையும். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த மறைமுக போட்டிகள் மாறும். இன்று வாழ்க்கைத்துணை உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பிள்ளைகளின் நலனுக்காக பாடுபடுவீர்கள். விருந்தினர் வருகை இருக்கும், தடைபட்டு வந்த திருமணம் காரியங்கள் சாதகமாகவே முடியும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க கூடும். குடும்பத்தில் வீண் விவாதங்கள் தோன்றாமல் பார்த்துக் கொள்ளுங்கள். […]
