ஆட்சியர் அலுவலகத்திற்கு தம்பதியினர் மண்ணெண்ணெய் கேனுடன் வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஏராளமான பொதுமக்கள் மனு அளிக்க சென்றுள்ளனர். இந்நிலையில் மனோஜிபட்டி பகுதியில் வசிக்கும் குமார்-சித்ரா தம்பதியினர் கையில் மண்ணெண்ணெய் கேனுடன் ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைய முயன்றனர். இதனை பார்த்ததும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்து மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தியுள்ளனர். இந்த தம்பதியினர் மங்கனூர் கிராமத்திலிருக்கும் நிலத்திற்கு பட்டா பெயர் மாற்றம் செய்து […]
