குடும்ப தகராறு காரணத்தினால் தம்பதியினர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அம்மனூர் பகுதியில் பாபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கிருஷ்ணவேணி என்று மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அன்பின் பாபு குடிப்பழக்கத்தினால் வேலைக்கு செல்லாமல் இருந்ததாக தெரியவந்துள்ளது. பின்னர் கிருஷ்ணவேணியிடம் மீண்டும் தகராறு செய்ததால் மன […]
