தம்பதிகளை தாக்கிய வாலிபர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஓலையூர் கிராமத்தில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசித்து வரும் புரட்சிமணி என்பவரது குடும்பத்தினருக்கும் இடையே ஒரு இடம் தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் பாலமுருகனின் மனைவி சுகன்யா அவரது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த புரட்சிமணி சுகன்யாவை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு அதனை தட்டிக் கேட்க வந்த பாலமுருகனை தாக்கியுள்ளார். […]
