வீடு புகுந்து தாக்கிய 4 பேரை ஊர் மக்கள் சுற்றி வளைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள அய்யம்பாளையத்தில் ஜெயக்குமார் என்பவர் தனது மனைவி சினேகாவுடன் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் அருகே மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அருண்பாண்டியன் என்பவர் சினேகாவை தவறாக பேசியுள்ளார். இதனை அறிந்த ஜெயக்குமார் மற்றும் சினேகாவின் மாமனாரான ராமலிங்கம் ஆகியோர் அருண்பாண்டியனை எச்சரித்துள்ளனர். […]
