பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய கணவன், மனைவி ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கவுண்டம்பாளையம் பகுதியில் வசிக்கும் வாலிபர் தனது நண்பரை பார்ப்பதற்காக வேடப்பட்டிக்கு சென்றுள்ளார். அப்போது மின்வாரிய அலுவலகம் அருகே நின்று கொண்டிருந்த ஒருவர் வாலிபரை வழிமறித்து தனது வீட்டில் அழகான பெண்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து பணம் கொடுத்தால் பெண்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என அந்த நபர் தெரிவித்துள்ளார். பின்னர் வாலிபர் சரி என்று கூறி அந்த நபருடன் சென்றுள்ளார். […]
