பொது தேர்வை பயமின்றி எதிர்கொள்ள மாணவர்களுக்கு ஆலோசனை. திருச்சியில் ஸ்ரீ ஆதிசங்கரர் கல்வி குழுமம் மற்றும் புதிய தலைமுறை கல்வி இணைந்து , மாணவர்கள் பொதுத் தேர்வில் வெற்றி பெறுவதற்கு வழிகாட்டும் வெற்றிப்படிகள் நிகழ்ச்சி நடந்தது. சமயபுரம், இருங்கலூர் அருகே உள்ள ஸ்ரீ ஆதிசங்கரர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திரளான மாணவர்கள் கலந்து கொண்டனர். ஸ்ரீ ஆதிசங்கரர் குழுமம் தலைவர் செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்வி குழுமம் டீன் ராஜா, தாளாளர் மஞ்சுளா செந்தில்நாதன் ஆகியோர் […]
