அரவை மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள் மற்றும் பஞ்சு எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள குமிளாம் பரப்பு பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான அரவை மில்லானது சித்தோடு அருகே உள்ள பச்சைப்பாளிமேடு பகுதியில் இயங்கி வருகிறது. இந்த மில்லுக்கு திருப்பூர், பொள்ளாச்சி மற்றும் கோயம்புத்தூர் போன்ற இடங்களில் டி-ஷர்ட்கள் மற்றும் பனியன்கள் உற்பத்தி செய்தது போக மீதம் உள்ள கழிவுகள் மறுசுழற்சி […]
