பல லட்ச ரூபாய் பணத்தை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நல அலுவலராகப் சரவணகுமார் என்பவர் வேலை பார்த்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் சரவணகுமார் ஆதிதிராவிடர் நலத் துறையில் காலியாக இருந்த சமையலர் உள்ளிட்ட பணியிடங்களை 12 பேரிடம் லஞ்சம் வாங்கி நிரப்பியுள்ளார். இதற்கான பணத்தை கல்லூரி மாணவர் விடுதியில் காப்பாளராக செந்தில், டிரைவர் மணி ஆகியோர் வசூலித்து சரவணகுமாரிடம் கொடுத்துள்ளனர். இது தொடர்பான புகாரின் அடிப்படையில் ஆதிதிராவிடர் […]
