புதுச்சேரி பாகூர் அருகே நித்தியானந்தாவின் முக்கிய சீடர் ஒருவரின் சடலம் நிர்வாண நிலையில் மீட்கப்பட்டுள்ளது. வில்லியனூர், ஏம்பலம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் வஜ்ரவேல். இவர் நித்தியானந்தா பெயரில் பேக்கரி நடத்திவருகிறார். இவர் புதுச்சேரியில் உள்ள நித்தியானந்தாவின் முக்கிய சீடர்களில் ஒருவராக இருந்தார்.நித்தியானந்தா ஆசிரமம் ஏம்பலம் பகுதியில் அமைய முக்கிய காரணமாக இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் அவரது பெரிய மாமியார் வசந்தா என்பவர், அவர் வாங்கிய கடனை திருப்பிக் கொடுப்பதற்காக வஜ்ரவேலுக்கு […]
