குழந்தைகளுக்கு பாலியல் ரீதியான பாதிப்புகள் ஏற்படும்போது அவற்றை எவ்வாறு கையாள வேண்டும் என்று சென்னையில் நடந்த பயிற்சியில் ஆசிரியர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. பெண் குழந்தைகளுக்கு பாலியல் ரீதியிலான தொந்தரவுகள் ஏற்படும்போது ஆசிரியர்கள் அதனை சட்ட ரீதியாக எவ்வாறு எதிர்கொள்வது என சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி கருத்தரங்கம் சென்னை மாநகராட்சி கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. இக்கருத்தரங்கில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் ரவி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டு […]
