பேனர் விவகாரத்தில் சென்னை மாநகராட்சியின் உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. விதி மீறி வைத்த பேனரால் சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இந்த உயிரிழப்புக்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்ததோடு பேனர் வைக்க கூடாது என்றும் அறிக்கை வெளியிட்டனர். அதே போல பேனர் விவகாரத்தில் சென்னை மாநகராட்சி நிர்வாகமும் பல கட்டுப்பாடுகளை விதித்தது. அதில் முறையான அனுமதி இல்லாத பேனரை அடித்துக் கொடுக்கும் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதோடு 5,000 […]
