சீனாவின் வூகான் மாகாணத்தில் இருந்து பரவிய கொரோனா உலக நாடுகளிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஒவ்வொரு நாடுகளிலும் ஏராளமான உயிர்களைப் பலி வாங்கி வரும் இந்த வைரஸிற்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டியுள்ளது. உலகளவில் 6,00,835 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 27,417 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற 1,33,426 பேர் குணமடைந்துள்ளனர். உலகளவில் அதிகபட்சமாக அமெரிக்காவில் 1,04,256 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது குறிப்பிட்டதக்கது. […]
