தமிழகத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக்கு பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், பிரதமர் மோடியும் 2 முறை மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார். கொரோனா தடுப்பு பணிக்காக சிறப்பு மருத்துக்குழு அமைக்கப்பட்டது. மத்திய அரசு அறிவிப்பதற்கு முன்னதாகவே ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தியது. 12 முறை என்னுடைய தலைமையில் […]
