கேரளாவில் இன்று 3 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு புதிதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது என கேரளா முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட 3 பேரும் காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இந்த நிலையில் கேரளாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 450 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும் கேரளா மாநிலம் கொரோனா பிடியில் இருந்து மீண்டு வந்து கொண்டிருக்கிறது எனறு தான் சொல்ல வேண்டும். இதுவரை, 330 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். மேலும் 116 பேர் தற்போது […]
