காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 96 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,471 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் காஞ்சிபுரத்தில் புதிதாக 66 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியிருந்தது. இதன் காரணமாக மொத்த பாதிப்புகள் 1,375 ஆக அதிகரித்திருந்தது. மேலும், இதுவரை 647 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், தற்போது 807 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இதுவரை 17 […]
