Categories
அரசியல்

இன்று 11 மணிக்கு…. கொரோனா நடவடிக்கை? எதிர்பார்ப்பில் மக்கள்..!!

இன்று காலை 11 மணிக்கு கொரோனா பாதிப்புக்கான தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புஅதிகரித்துக் கொண்டே வருகிறது. இதை தடுப்பதற்காக தமிழக அரசின் சுகாதாரத் துறையும் பல்வேறு நடவடிக்கைகளை ஆரம்ப கால கட்டத்திலிருந்து மேற்கொண்டு வருகின்றனர். தற்போது ஊரடங்கு தளர்வு ஏற்படுத்தப்பட்டதை தொடர்ந்து தான், கொரோனா பாதிப்பு அதிகமாகி வருவதால், ஊரடங்கு அமல் படுத்த கோரி தமிழக முதல்வரிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் தற்போதைக்கு அதற்கான எந்த திட்டமும் […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் 8 இராணுவ அதிகாரிகளுக்கு கொரோனா.. மொத்தம் 28 ஆக உயர்வு!

பாகிஸ்தான் நாட்டில் 8 இராணுவ அதிகாரிகள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகின்றது. 127 நாடுகளில் பரவியிருக்கும் கொரோனா 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை கொன்று குவித்துள்ளது. மேலும் 1 லட்சத்து 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் பாகிஸ்தானிலும் பரவியுள்ளது. அந்நாட்டில் ஏற்கனவே சிந்து மாகாணத்தில் 14 பேர், கில்ட் -பல்டிஸ்தான் பகுதியில் 5 பேர் மற்றும் பலுசிஸ்தானில் ஒருவர் உட்பட 20 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த […]

Categories
தேசிய செய்திகள்

அமெரிக்காவில் இருந்து கர்நாடகா வந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு..!

கர்நாடகாவில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவை சேர்ந்த அந்த நபர் மார்ச் 1-ம் தேதி அமெரிக்காவில் இருந்து சமீபத்தில் நாடு திரும்பியது தெரியவந்துள்ளது. இந்நிலையில் அவருக்கு மருத்துவ  பரிசோதனை செய்ததில் கொரானாவின் பாதிப்பு  இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது என்று கர்நாடக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகர், தெரிவித்தார். இதைதொடந்து   தற்போது அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.   Karnataka Medical Education Min Dr. K Sudhakar: The wife & […]

Categories
உலக செய்திகள்

உலகை மிரட்டும் கொரானா வைரஸ் …தமிழர்களின் உதவியை நாடும் சீனா..! கைகொடுக்கும் தமிழர் ரசம்.!!

சீனாவில் தொடங்கி உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸுக்கு இன்று வரை உலக நாடுகள் மருந்துகளை கண்டுபிடிக்கும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். நாடுமுழுவதும் 3000-திற்கும் அதிகமானவர்களை பலிகொண்ட இந்த வைரஸ் உலக சுகாதார நிறுவனத்தால் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகும். இதற்க்கு தடுப்பு மருந்து கண்டு பிடிக்க முடியாமல் பல நாடுகள்  திணறி வரும் நிலையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூலிகை சார்ந்த மருத்துவத்தையும் மருத்துவர்கள் கொடுத்து வருகின்றனர். கொரானா வைரஸ் சித்த மருத்துவத்தால் குணப்படுத்த முடியும் என […]

Categories
உலக செய்திகள்

கொரானா வைரஸ் பரவியதற்கு மண்டியிட்டு மன்னிப்பு கோரினார் – தலைவர் லீ மேன் ஹீ

தென்கொரியாவில் கொரானா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் வழிபாட்டின் போது தேவாலயத்தில் இருந்து வைரஸ் பரவியதால் தொலைக்காட்சி கேமராக்கள் மற்றும் நிருபர்கள் என ஏராளமானவர்கள் முன் மதப்பிரிவின் தலைவர். லீ மேன் ஹீ மண்டியிட்டு மன்னிப்பு கோரினார். ஷின்சியோன்ஜி பிரிவின் தலைவர் லீ மேன் ஹீ  இவ்வாறு மன்னிப்பு கோரினார். ஷின்சியோன்ஜி தேவாலயத்தில் வழிபட்ட பெண் மூலம் பலருக்கும் பரவியதாக கண்டறியப்பட்டுள்ளது. யாரையும் குற்றம் சாட்டுவதற்கான நேரம் இது அல்ல; மேலும் தனது  மத அமைப்பு […]

Categories
உலக செய்திகள்

திணறும் சீனா வேறு வழியின்றி பின் வாங்கியது … அடுத்த அவசர நடவடிக்கை … முழு மாற்றைத்தை நோக்கி சீன மக்கள்

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பெரிதளவில் பாதிக்கப்பட்ட  சீன அரசாங்கம் வனவிலங்குள்  விற்பனையை முழுமையாக தடை செய்யும்   நடவடிக்கைகளை  மேற்கொண்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இதுவரை வரை 30-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, உலகளவில் பலியானவர்களின் எண்ணிக்கை 2,698-ஆக உயர்ந்துள்ளது. சீனாவின் வூஹான் நகரில் கொரோனா வைரஸ் பரவத்தொடங்கி உலகத்தையே பயமுறுத்தி வருகின்றது. இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் […]

Categories
உலக செய்திகள்

பாம்புகளில் இருந்து கொரானா பரவவில்லை..!. இதன் மூலமாகதான் பரவியது … திடீர் புதிய திருப்பம் !

கொரானா வைரஸ் பாம்புகளிடம் இருந்து  பரவியது என முதலில் கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது புதிய திருப்பமாக இந்த வைரஸ் வௌவ்வாலில் இருந்துதான் முதலில் பரவிய இருக்கும் என சீனாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது. சீனாவில் தொடங்கிய கொடிய கொரானா வைரஸுக்கு  இதுவரை  1600 க்கும்  அதிகமான மக்கள்  உயிரிழந்துள்ளனர். இந்த கொடிய வைரசால் சுமார் 68,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில்  இந்த வைரஸ் முதலில் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவியது என்று கூறப்பட்டு வந்தது. […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கொரோனாவால் காதலர்கள் பாதிப்பு… வெறிச்சோடிய கன்னியாகுமாரி

உலகம் முழுவதும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் கன்னியாகுமரியில் ஆள் இல்லாத சூழல் உருவாகியுள்ளது. காதலர் தினம் என்றாலே காதலர்கள் கடற்கரையிலோ பூங்காவிலும் சிறப்புமிக்க இடங்களிலோ தனது காதலை கொண்டாடுவார்கள். அவ்வகையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பலர் கன்னியாகுமரி கடற்கரைக்கு வந்து தங்கள் காதலர்களுடன் காதலர் தினத்தை கொண்டாடுவது வழக்கம். விடுதிகள் அனைத்தும் அவர்களின் பதிவாகியிருக்கும். இம்முறையும் அதே எதிர்பார்ப்பில் இருந்த கன்னியாகுமரி ஏமாற்றத்தை அடைந்துள்ளது. இதுவரை ஒரு வெளிநாட்டு […]

Categories
உலக செய்திகள்

ஜப்பானில் மேலும் 41 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

ஜப்பானில் மேலும் 41 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறிகள் இருப்பதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் கட்சுனோபு கேதோ கூறினார். சீனாவின் வுகான் மாகாணத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக உள்ளது. ஆகையால் இங்குள்ள வெளிநாட்டினர் தங்களின் சொந்த நாடுகளுக்கு திரும்பிவருகின்றனர். ஜப்பான் அரசும் சுகாதார அவசரநிலையை அறிவித்து சீனாவில் சிக்கியுள்ள ஜப்பானியர்களை மீட்டுவருகிறது. அந்த வகையில் ஹாங்காங்கிலிருந்து 273 ஜப்பானியர்கள் விமானத்தில் அழைத்துவரப்பட்டனர். அவர்களில் 25 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளது. தற்போது […]

Categories
உலக செய்திகள்

கொரோனோ குறித்து முதன்முறையாக எச்சரிக்கை விடுத்த மருத்துவர் மரணம்

கொரோனோ வைரஸ் குறித்து முதன்முறையாக எச்சரிக்கை விடுத்த மருத்துவர் அதே வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனோ வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தும் உயிர்க்கொல்லியாக உருவெடுத்துள்ளது. இந்த கொரோனோ வைரஸ் தாக்குதல் காரணமாக இதுவரை 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது. மேலும் உலக அளவில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனோ வைரஸ் பாதிப்பு இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனோ வைரஸ் காரணமாக அனைத்து நாடுகளும் சீனாவுடனான போக்குவரத்து […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா வைரஸ்: கேரள மருத்துவமனையில் சீன பயணி அனுமதி …!!

இந்தியாவுக்கு வந்த சீன சுற்றுலா பயணி ஒருவர், கரோனா வைரஸ் அச்சம் காரணமாக கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சீனாவின் உகான் நகரிலிருந்து கரோனா வைரஸ் பரவ தொடங்கியது. இந்த வைரஸ் பாதிப்பின் காரணமாக சீனாவில் பலியானோர் எண்ணிக்கை 563 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 73 பேர் பலியாகி உள்ளனர். 28,018 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழலில், இந்தியாவுக்கு வந்த சீன சுற்றுலா பயணி […]

Categories
உலக செய்திகள்

கோர தாண்டவமாடும் கொரோனா : “560 பேர் பலி , 28000 பேர் பாதிப்பு..!

சீனாவில் வேகமாக பரவிவரும் கொரானா வைரஸ் தாக்குதலில் பலி எண்ணிக்கை 560 உயர்ந்துள்ளது. சினாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது நாடு முழுவதும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இதனால் நாளுக்கு நாள் அதிகரித்து வரும்  உயிரிழப்புகளால் உலக நாடுகள் அச்சத்தில் இருந்து வருகின்றன. குறிப்பாக சீனாவில் மிகப்பெரிய பாதிப்பை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது. வைரஸ் பாதிப்பால் மருத்துவமனைகள் அனைத்தும் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. எனவே அங்கு  2 புதிய தற்காலிக மருத்துவமனைகள்  கட்டுவதற்கு அரசு நடவடிக்கை […]

Categories
உலக செய்திகள்

ஆ..!.. இங்க அடி… ஆ…!.. அங்க அடி….!! கொரோனா_வால் வைரலாகும் வீடியோ …!!

கொரோனா கொடூர வைரஸ் தொற்றால் உலக நாடுகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளன. கொரோனா என்கிற அரிய வகை வைரஸ் காய்ச்சல், சீனா முழுவதும் மிக வேகமாகப் பரவிவருகிறது. இந்த வகை வைரஸ் காய்ச்சலினால் சீனாவில் மட்டும் தற்போதுவரை 360-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 16,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனர்கள் மட்டுமின்றி, அந்நாட்டில் தங்கியிருக்கும் பிற நாட்டவருக்கும் இந்த வைரஸ் காய்ச்சல் பரவிவருகிறது. இதனால் சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளிலும் பொதுமக்கள் […]

Categories

Tech |