கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்களும் அரசின் வழிகாட்டுதலின்படி பாதுகாப்பாக தங்களது அன்றாட வாழ்க்கையை மேற்கொண்டாலும் அனைவருக்கும் நோய்க்கான தடுப்பூசி எப்போது கண்டுபிடிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது. ஆனால் கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்த பின்னரும் பொதுமக்களுக்கு ஒரு விதமான அச்சம் நிலவி வந்தது. அதற்கான காரணம் உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசியினால் ஒரு சில பக்க விளைவுகள் ஏற்படும் என்பது உள்ளிட்ட செய்திகள் […]
