கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த கடைசி நபரும் குணமடைந்தார். கரூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெட்ரா 42 பேரில் ஏற்கனவே 41 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இந்த நிலையில், கொரோனா பதித்த கடைசி நபரும் இன்று பூரண நலமடைந்து வீடு திரும்பினார். குணமடைந்த அந்த பெண்ணை 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். குணமடைந்த பெண்ணை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் மாவட்ட ஆட்சியர் வழியனுப்பி வைத்தனர். முன்னதாக ஈரோடு மாவட்டத்தில் […]
