போதிய வருவாய் இல்லாததாலும் பயணிகள் இல்லாததாலும் பேருந்துகள் இயக்கம் பாதியாக குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் 1ம் தேதி முதல் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. 50% பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், 5,000திற்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் பல்வேறு மாவட்டங்களில் இயக்கப்பட்டு வந்தது. ஆனால் போதிய அளவுக்கு பேருந்துகளில் பயணிகள் பயணம் மேற்கொள்ளவில்லை. மேலும் கிராமங்களில் எதிர்பார்த்த அளவுக்கு மக்கள் பயணம் மேற்கொள்ளவில்லை. […]
