வெளியூர்களுக்கு செல்பவர்களுக்கு சென்னை மாநகராட்சி புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடுள்ளது. சென்னையில் நேற்றைய நிலவரப்படி பாதிப்பு எண்ணிக்கை 13,362ஆக உள்ளது. இன்று மேலும் 609 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிப்பு எண்ணிக்கையானது 14,000ஐ தாண்டியுள்ளதக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் சென்னையில் நாள் நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்பவர்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து சென்னை வருபவர்களுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. […]
