சென்னை வண்ணாரப்பேட்டையில் காவல் ஆய்வாளர் உட்பட 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல இன்று காலை சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் 10ம் வகுப்பு மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து அந்த மாணவர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் சென்னையில் தனியார் மருத்துவமனையில் வேலை பார்க்கும் 3 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 309 பேருக்கு […]
