ஊரடங்கு உத்தரவு காலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 21 நாள் ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி பிறப்பித்ததையடுத்து மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். நாடே வெறிச்சோடி இருக்கிறது. அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் மக்கள் வெளியே சென்று, பொருட்களை வாங்கி வருகின்றனர். தேவையில்லாமல் மக்கள் யாருமே வெளியே வரவில்லை. வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தாலும், பெண்களுக்கு […]
