Categories
மாநில செய்திகள்

இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை – சுகாதாரத்துறை!

தமிழகத்தில் இன்று 3,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 70,000ஐ தாண்டியுள்ளது. தமிழகம் முழுவதும் 70,977 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 3,358 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 151 பேரும் இன்று கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று 36 மாவட்டங்களிலும் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் புதிதாக யாரும் கொரோனோவால் பாதிக்கப்படவில்லை என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. புதிதாக கொரோனா பாதித்த மாவட்டங்கள் விவரம் : […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனோவால் இன்று 37 பேர் உயிரிழப்பு… பலி எண்ணிக்கை 800ஐ நெருங்குகிறது!

தமிழகத்தில் கொரோனோவால் இன்று ஒரே நாளில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 794ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 22 பேர் கொரோனோவால் உயிரிழந்துள்ளனர். சென்னையில் கொரோனோவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 623ஆக உயிரிழந்துள்ளனர். இன்று 1,358 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 34,112ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 55% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று  2,710 பேருக்கு கொரோனா தொற்று […]

Categories
மாநில செய்திகள்

குட் நியூஸ் : தமிழகத்தில் கொரோனாவா பாதிக்கப்பட்ட 51.11% பேர் குணமடைந்துள்ளனர் – சுகாதாரத்துறை!

தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 51.11% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  தமிழகத்தில் இன்று 407 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 8,731ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 805 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,082ஆக உயர்ந்துள்ளது. மராட்டியத்தில் வந்த 87 பேர், குஜராத்தில் இருந்து வந்த 3 பேர், கேரளத்தில் இருந்து வந்த 2 பேர், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை : மாவட்ட வாரியாக முழு விவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,550ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 266 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,724ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸிற்கு ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 32ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 30 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் தமிழகம் முழுவதும் கொரோனா பாதித்து […]

Categories
மாநில செய்திகள்

மத்திய அரசு அறிவித்த ஊரடங்கில் எந்தவித மாற்றமும் இல்லை; மே 3 வரை தொடரும் – தமிழக அரசு!

மத்திய அரசு அறிவித்த ஊரடங்கில் எந்தவித மாற்றமும் இல்லை, மே 3 வரை ஊரடங்கு தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,058ஆக உயர்ந்துள்ளது. கொரோனோவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. எனினும் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் […]

Categories
மாநில செய்திகள்

ரேபிட் கிட் சோதனை மூலம் தமிழகத்தில் சமூக தொற்று இல்லை என்பது உறுதி – அமைச்சர் விஜயபாஸ்கர்!

தமிழகத்தில் சமூக தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் அளித்துள்ளார். தமிழகத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 1,520 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இன்று இருவர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 17ஆக அதிகரித்துள்ளது. எனினும் தமிழகத்தில் சமூக தொற்று இல்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் அளித்துள்ளார். ரேபிட் கிட் சோதனை மூலம் தமிழகத்தில் சமூக தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

கேரளாவில் ஊரங்கில் சில தளர்வுகள் அமல் – அறிவிப்பில் இல்லாதவை என மத்திய அரசு கண்டனம்!

கேரள அரசு அறிவித்துள்ள ஊரடங்கு தளர்வுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும் சில தொழில்களுக்கு ஊரடங்கில் இருந்து தளர்வு அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அந்தந்த மாநில அரசுகள் முடிவு எடுத்தும் கொள்ளும் அதிகாரத்தை மத்திய அரசு வழங்கியுள்ளது. ஆனால் ஊரடங்கு நெறிமுறைகள், சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. […]

Categories
புதுக்கோட்டை மாநில செய்திகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கு தளர்த்தப்படாது – ஆட்சியர் உமாமகேஸ்வரி அறிவிப்பு!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கு தளர்த்தப்படாது என ஆட்சியர் உமாமகேஸ்வரி அறிவித்துள்ளார். இந்தியாவால் கொரோனோவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,116ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 519ஆக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும் சில தொழில்களுக்கு ஊரடங்கில் இருந்து தளர்வு அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அந்தந்த மாநில அரசுகள் முடிவு எடுத்தும் கொள்ளும் அதிகாரத்தை மத்திய அரசு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

உரிய நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்காமல் இருந்திருந்தால் பாதிப்பு அதிகமாக இருந்திருக்கும் – பிரதமர் மோடி உரை!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உரிய நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்காமல் இருந்திருந்தால் பாதிப்பு அதிகமாக இருந்திருக்கும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,363ஆக அதிகரிந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 339ஆக அதிகரித்துள்ள நிலையில் கொரோனாவில் இருந்து இதுவரை 1,036 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா ஊரடங்கு : பெண்களுக்கு எதிராக அதிகரித்த குற்றம் – அதிர்ச்சி புள்ளி விவரம் …!!

ஊரடங்கு உத்தரவு காலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 21 நாள் ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி பிறப்பித்ததையடுத்து மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். நாடே வெறிச்சோடி இருக்கிறது. அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் மக்கள் வெளியே சென்று, பொருட்களை வாங்கி வருகின்றனர். தேவையில்லாமல் மக்கள் யாருமே வெளியே வரவில்லை. வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தாலும், பெண்களுக்கு […]

Categories

Tech |