தேவையில்லாமல் வெளியில் சுற்றித்திரிந்த 14 பேரை பிடித்து அதிகாரிகள் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்துள்ளனர். தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கின் விதிமுறைகளை பொதுமக்கள் முறையாக பின்பற்றுகின்றனரா என காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் பகுதியில் அதிகாரிகள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது விதிமுறைகளை மீறி 10 மோட்டார் சைக்கிள்களில் 3 பெண்கள் மற்றும் 11 வாலிபர்கள் அத்தியாவசிய தேவையின்றி கூட்டமாக வந்துள்ளனர். இதனையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் அதிகாரிகளை […]
