வீடு வீடாக சென்று அதிகாரிகள் பொதுமக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்துள்ளனர். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை நகராட்சி நிர்வாக அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் இணைந்து கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வால்பாறை நகரில் இருக்கும் மருந்து கடைகள், ஏ.டி.எம் மையங்கள் போன்ற இடங்களில் நகராட்சி ஆணையாளர் சுரேஷ்குமாரின் தலைமையில் துப்புரவு பணியாளர்கள் கிருமி நாசினி […]
