உத்திரபிரதேசத்தில் கொரோனாவை வைத்து கொள்ளை லாபம் சம்பாதித்து வந்த மருத்துவமனைக்கு அம்மாநில அரசு சீல் வைத்துள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் சூழ்நிலையில், மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்டோர் அயராது தங்களது பணியை மக்களுக்காக சேவையாக செய்து வருகின்றனர். இவர்கள் மக்களால் தற்போது போற்றப்படுகின்றனர். இருப்பினும் சில தனியார் மருத்துவமனைகளும், சில அதிகாரிகளும் செய்யும் பெரிய தவறுகள், மனிதத்தன்மையற்ற செயல்கள் இந்த துறைகளை ஒரு நிமிடத்தில் கொச்சைப்படுத்திவிடுகிறது. […]
