சேலம் மாவட்டத்தில் 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பானது படிப்படியாக குறைந்துள்ளது. இந்நிலையில் ஏழு பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. இதில் சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 3 பேர் மற்றும் கெங்கவல்லி, கொளத்தூர், வீரபாண்டி, ஆத்தூர் பகுதிகளில் வசிக்கும் 4 பேர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை அம்மாவட்டத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து […]
