கூலி தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள குரும்பபாளையம் பகுதியில் கூலித் தொழிலாளியான அண்ணாமலை என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் உறவினரான கதிரவன், மணி ஆகியோருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்ட போது கதிரவனும், மணியும் இணைந்து அரிவாளின் பின்பக்கத்தால் அண்ணாமலையின் நெஞ்சுப்பகுதியில் அடித்துள்ளனர். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அண்ணாமலையின் தாயார் ராசாத்தி என்பவர் சண்டையை விலக்கி விட்டு […]
