பேருந்து நிறுத்த நிழற்குடையில் தஞ்சமடைந்த தொழிலாளியின் குடும்பத்தினருக்கு அதிகாரிகள் தங்குமிடம் ஏற்பாடு செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள ஜெயங்கொண்டத்தில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிடங்களுக்கு டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு கீதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சபரிவாசன் என்ற மகன் இருக்கிறான். இந்த சிறுவன் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சங்கருக்கு சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தம் காரணமாக வாத நோய் ஏற்பட்டுள்ளது. […]
