தேனீக்கள் கொட்டியதால் தொழிலாளி உயிரிழந்த நிலையில், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள குரும்பபாளையம் பகுதியில் கூலி தொழிலாளியான ரமேஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது தாய் கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில் ரமேஷ் குமார் தனது தந்தையான முருகன் மற்றும் உறவினர்களுடன் 16-வது நாள் திதி கொடுப்பதற்காக ஆழியாற்றுக்கு சென்றுள்ளனர். இதனை அடுத்து திடீரென மலை தேனீக்கள் கூட்டமாக பறந்து வருவதை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் அலறி அடித்து […]
