மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக தொழிலாளியையும், உடந்தையாக இருந்த சிறுமியின் தாயையும் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை பகுதியில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் நூற்பாலையில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகின்றார். அதே நூற்பாலையில் வேலை பார்க்கும் 45 வயது பெண்ணிற்கும், சிவகுமாருக்கு இடையே பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறி விட்டது. இந்நிலையில் கணவரை விட்டு பிரிந்து வாழும் அந்த பெண்ணின் வீட்டிற்கு சிவகுமார் சென்றுள்ளார். […]
