தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் இரண்டு லாரிகளில் கொண்டுவரப்பட்ட 3520 குக்கர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் கண்காணிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. அதிலும் குறிப்பாக பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பறக்கும் படை அதிகாரி சரவணன் தலைமையிலான காவல்துறையினர் அரியலூர் மாவட்டத்திலுள்ள சமத்துவபுரம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது இரண்டு லாரிகள் தஞ்சை நோக்கி […]
