நெகிழிக் கழிவுகளிலிருந்து கச்சா எண்ணெய் எடுத்து ஆந்திர மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். இந்த நவீன காலகட்டத்தில் மாசுவின் மறுவுருவமாக நெகிழி பார்க்கப்படுகிறது. ஆனால், அதனைச் சரியாகக் கையாண்டால், அது அதிசயமாக மாற வாய்ப்புள்ளது. ஆந்திர மாநிலம் விஜயவாடா கே.பி.என். கல்லூரியில் பயிலும் மூன்று முதுகலை மாணவர்கள் நெகிழிக் கழிவுகளை கச்சா எண்ணெய்யாக மாற்றிவருகின்றனர். அவர்களின் முயற்சி பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. பி.வி.சி. நெகிழிக் கழிவுகளை எரிப்பதன் மூலம் வெளிப்படும் நீராவிகளிலிருந்து கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்கின்றனர். 2 […]
