Categories
சினிமா தமிழ் சினிமா

சிவகார்த்திகேயன் படத்திற்கு தடை….. அதிர்ச்சியில் ரசிகர்கள் …!!

நடிகர் சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தை சாட்டிலைட் டிவி, ஓடிடி தளத்தில்  வெளியிடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயனின் ஹீரோ படம் வெளியானதை தொடர்ந்து இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சயின்ஸ் ஃபிக்ஸன் மையமாக கொண்டு அயலான் படமும், அசத்தல் படமாக  இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் டாக்டர் படமும் ரிலீஸ்க்கு தயாராகி கொண்டிருக்கிறது. இயக்குனர் மித்ரன் நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து இயக்கிய படம் தான் ஹீரோ. இப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இப்படத்தை பற்றி பலவிதமான சர்ச்சை கருத்துக்களும், […]

Categories
மாநில செய்திகள்

கொரோனாவுக்குச் சரியான சிகிச்சை அளிப்பதில்லை என்ற சர்ச்சை… ஸ்டான்லி மருத்துவமனை டீன் முற்றுப்புள்ளி!

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோருக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மனையில் சரியான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை மருத்துவமனையின் முதல்வர் சாந்தி மலர் மறுத்துள்ளார். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவருக்கு, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சரியான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு அங்கு படித்து வரும் சில மாணவர்களால், சில தினங்களாக கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து மருத்துவமனையின் முதல்வர் சாந்தி மலர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். செய்தியாளர்களிடையே பேசிய அவர், ‘கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவருக்குத் தகுந்த ஏற்பாடுகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

முருகனை இழிவுப்படுத்தியதாக நடிகர் யோகி பாபு மீது புகார்!

இந்துக் கடவுளை இழிவுப்படுத்தும் வகையில் நடித்ததாக நடிகர் யோகி பாபு மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் யோகி பாபு நடிப்பில், இயக்குநர் விஜய முருகன் இயக்கியுள்ள திரைப்படம் “காக்டெய்ல்”. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது. அதில் யோகி பாபு முருகன் வேடத்தில் நிற்பது போலவும், அவருக்குப் பின்னால் ஆஸ்திரேலிய வகைக் கிளியான காக்டெய்ல் அமர்ந்திருப்பது போலவும் இருந்தது. இது இந்துக்களின் மனதை புண்படுத்திவிட்டதாகக் கூறி, இந்து மக்கள் முன்னணி அமைப்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”காக்டெய்ல்’ முருகனை அவமானப்படுத்தும் படம் இல்லை’ – மறுப்பு தெரிவித்த இயக்குநர்..!!

நாங்கள் வழிபடும் கடவுளை, நாங்களே எப்படி தவறாக சித்தரிப்போம்’ என காக்டெய்ல் பட இயக்குநர் விஜய முருகன் தெரிவித்துள்ளார். ‘காக்டெய்ல்’ பட கதைப்படி முருகன் சிலை, ஒரு முக்கிய கதாபாத்திரமாகவே இடம்பெற்றுள்ளது. அதன் அடிப்படையில்தான் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் விஜயமுருகன் தெரிவித்துள்ளார். பி.ஜி. மீடியா ஒர்க்ஸ் சார்பில் அறிமுக இயக்குநர் விஜயமுருகன் இயக்கத்தில் யோகிபாபு நடித்துள்ள படம் ‘காக்டெய்ல்’. யோகிபாபுவுடன் ரமேஷ், மிதுன் மற்றும் ‘விஜய் டிவி கலக்கப்போவது யாரு’ புகழ் பாலா, குரேஷி, […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

டெல்லி தேர்தல் : பாஜக நட்சத்திர பேச்சாளர்களுக்கு தடை ….!!

சர்ச்சை கருத்து தெரிவித்த பாஜகவின் நட்சத்திர பேச்சாளர்களான அனுராக் தாகூர், பர்வேஷ் வெர்மா ஆகியோருக்கு பரப்புரையில் ஈடுபட தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி மாதம் ஏழாம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு பிப்ரவரி 10ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இம்முறை ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என மும்முனைப் போட்டி நிலவுவதால் அனைத்துக் கட்சியினரும் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். இதில் பல அரசியல் கட்சியினர் தேர்தல் பரப்புரையின்போது விதிகளை […]

Categories
தேசிய செய்திகள்

சிஏஏ போராட்டத்தில் சர்ச்சை பேச்சு; உ.பி. மருத்துவர் கைது

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் கூறி உத்தரப் பிரதேச மருத்துவர் கஃபீல் கான் கைது செய்யப்பட்டுள்ளார். குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள், மாணவர்கள், பல்வேறு அமைப்பினர் சார்பில் ஒரு மாதத்திற்கும் மேலாகப் போராட்டம் நடைபெற்றுவருகிறது. இந்தப் போராட்டத்தில் பங்கேற்று சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசியதாகக் கூறி கோரக்பூர் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் கஃபீல் கான் என்பவர் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த டிசம்பர் 12ஆம் தேதி அலிகர் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மது போதையில் தற்கொலை செய்துகொண்ட தலையாரி!

குடும்ப பிரச்னை காரணமாக மது போதையில் கிராம உதவியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் துறைமங்கலம் பகுதியில் மாரியம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவர் வெங்கடாச்சலம், இவர் துறைமங்கலம் கிராம உதவியாளராக (தலையாரி) பணிபுரிந்து வருகிறார். இவருக்கு தொடர்ச்சியாக மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது, அடிக்கடி மது அருந்திவிட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாகத் தெரிகிறது. இதனிடையே நேற்று வழக்கம்போல் மது அருந்துவிட்டு மனைவியிடம் சண்டையிட்டபோது ஏற்பட்ட பிரச்னையால், தனது வீட்டு விட்டத்தில் வேட்டியால் […]

Categories
தேசிய செய்திகள்

‘சபரிமலையில் பீடி, சிகரெட் குடித்த பெண்கள்’ – அர்ஜூன் சம்பத் சர்ச்சைப் பேச்சு

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பீடி, சிகரெட், மது குடிக்கும் பெண்களை கோயிலுக்குள் அனுமதித்தவர் பினராயி விஜயன் என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் குற்றம்சாட்டியுள்ளார். சபரிமலையில் அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற தீர்ப்புக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகளை, 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டிருக்கிறது.இந்தத் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத், உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

காலாண்டு விடுமுறை குறித்து எழுந்த சர்சைக்கு இதான் காரணம்….!!

காலாண்டு தேர்வு விடுமுறை விடப்படுமா என்ற கேள்வி எழுந்ததற்கான காரணம் காந்தியின் பிறந்தநாள் குறித்து மாநில திட்ட இயக்குனர் வெளியிட்ட வழிமுறை ஆகும். தமிழகம் முழுவதும் காலாண்டு தேர்வு முடிந்த பின்பாக செப்டம்பர் 23ஆம் தேதி முதல் அக்டோபர் 2_ஆம் தேதி வரை விடுமுறை என்று இந்த வருட தொடக்கத்திலேயே ஏற்கனவே பள்ளிக் கல்வித் துறை அறிவித்திருந்தது. இதையொட்டி வரும் அக்டோபர் 2_ஆம் தேதி காந்தியின் 150 வது பிறந்த நாளை ஒட்டி இந்த வருடம் தொடங்கி 2020_ஆம் ஆண்டு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இளம்பெண்ணுக்கு ட்வீட்” சர்சையில் சிக்கிய வேகப்பந்து வீச்சாளர் ஷமி…!!

இளம்பெண்ணுக்கு ட்வீட்_டரில் குறுச்செய்தி அனுப்பியதாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி சர்சையில் சிக்கியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி தொடர்ந்து பெண்கள்  விவகாரத்தில் சிக்குவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இவருக்கு பல பெண்களுடன் தகாத தொடர்பு மற்றும் உறவு உள்ளதாக அவரது மனைவி ஜஹானே காவல்துறையில் கொடுத்த புகார் நிலுவையில் இருந்து வருகின்றது.இந்நிலையில் தற்போது இளம்பெண் ஒருவருக்கு டுவிட்டரில்  குறுஞ்செய்தி அனுப்பி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் முகமது ஷமி. சோபியா என்ற இளம்பெண்ணுக்கு தனது ட்வீட்_டர் பக்கத்தில்  என்னை 1.4 மில்லியன் பேர் […]

Categories
திருச்சி மாநில செய்திகள்

காந்தியை சுட்டதில் தவறில்லை “கமலை நடமாட விட மாட்டோம்” செண்பக மன்னார் ஜீயர் சர்ச்சை கருத்து…!!

காந்தியை கோட்சே சுட்டதில் தவறில்லை நடிகர் கமலை நடமாட விடப்போவதில்லை என்று செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரவக்குறிச்சி சட்ட பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்த கமல் , சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு இந்து என்றும் , அது  நாதுராம் கோட்சே என்று கூறினார். இவரின் இந்த சர்சை  பேச்சுக்கு பாஜக , அ.தி.மு.க. மற்றும்  இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும் கமல் மீது  […]

Categories

Tech |