சிறைச்சாலைகளில் தொடர்ந்து நடக்கும் ஊழலைத் தடுத்து நிறுத்தக்கோரி அலுவலர்களுக்கு சிறைத் துறை கூடுதல் காவல் இயக்குநர் கனகராஜ் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இது தொடர்பாக, அனைத்து சிறைத் துறை அலுவலர்களுக்கும் சிறைத் துறை கூடுதல் காவல் இயக்குநர் கனகராஜ் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தமிழ்நாடு சிறைகளில் நடத்தப்பட்ட விசாரணையில் சிறைப் பணியாளர்கள், சிறைவாசிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு தொடர்ந்து பல்வேறு வசதிகளைச் செய்துதருவதாகத் தெரியவந்துள்ளது. அதிலும் குறிப்பாக ரவுடிகள் சிறையின் சுவரைத் தாண்டி தப்பித்துச் சென்று சட்டவிரோத செயல்களில் ஈடுபட உதவிபுரிவதாகவும், […]
