ஏரியின் மூலமதகு சீரமைப்பு குறித்து விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவேரிப்பாக்கம் பகுதியில் இருக்கும் பெரிய ஏரியின் மூலமதகு சீரமைப்பு குறித்து வேலூர் நீர்வள ஆதாரத் துறை செயற்பொறியாளர் ரமேஷ் தலைமையில் விவசாயிகளிடம் கருத்து கேட்புக் கூட்டம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் வைத்து நடைபெற்றுள்ளது. அப்போது விவசாயிகள் ஏரி கால்வாய் தண்ணீர் கொண்டு விவசாயம் செய்துள்ளனர். அதனால் ஏரியில் இருக்கும் தண்ணீரை கடைவாசல் வழியாக வெளியேற்றாமல் மதகுகள் வழியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் […]
