கார் மோதிய விபத்தில் கட்டிட தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் கட்டிட தொழிலாளியான சங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் சங்கர் தனது தோட்டத்திற்கு நடந்து சென்றுள்ளார். இதனை அடுத்து அவர் நான்கு வழிச் சாலையை கடக்க முயற்சி செய்த போது அவ்வழியாக வேகமாக சென்ற கார் சங்கரின் மீது பலமாக மோதி விட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சங்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். […]
