பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் மற்றும் அதனை சுற்றியுள்ள சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கீழநத்தம், வால்காரமேடு, கண்ணங்குடி மற்றும் ஆடூர் போன்ற 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகிவிட்டது. இதனையடுத்து விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் பொருட்டு மழைநீரில் மூழ்கி அழுகிய பயிர்களை கணக்கெடுக்கும் பணியானது இன்னும் தொடங்கப்படவில்லை. இதனால் கோபமடைந்த விவசாயிகள் […]
