பாஜக மூழ்கும் படகு, அதில் ஏறி பயணம் செய்துவரும் அதிமுக, பாஜகவுடன் சேர்ந்து அடுத்த தேர்தலில் மூழ்கப் போகிறது என்று காங்கிரஸ் எம்.பி.திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் திருச்சி மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை திமுக காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் கேட்ட பல்வேறு இடங்கள் கிடைக்கவில்லை. அதனால், ஏற்பட்ட பிரச்னைகளால் திமுக, காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தனர். தற்போது, திமுக தலைவர் ஸ்டாலினால் இந்தப் […]
