மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்றதால் மன உளைச்சலில் இருந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கென்பத்தாபள்ளி பகுதியில் அந்தோணிசாமி என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கும், இவரது மனைவிக்கும் அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் கணவன் மனைவிக்கிடையே சண்டை வந்தபோது, கோபத்தில் அந்தோணிசாமியின் மனைவி அவரது பெற்றோர் வீட்டிற்கு போய்விட்டார். இதனால் மிகவும் மன உளைச்சலில் இருந்த அந்தோணிசாமி […]
