சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கொழும்புவில் இருந்து சென்னை வந்த இலங்கையைச் சேர்ந்த 2 பேரை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பொழுது உடமைகளில் மறைத்து வைத்து எடுத்து வரப்பட்ட 40 லட்சம் மதிப்புள்ள தங்க மோதிரம் மற்றும் சங்கிலிகளை கைப்பற்றினர். இதுபோல துபாயில் இருந்து வந்த தஞ்சாவூரை சேர்ந்த மாதவன் என்பவர் 16 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தாய்லாந்து தலைநகர் […]
