பணியில் இருக்கும் போது கண்டக்டரை சிலர் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள மீனாட்சிபுரம் பகுதியில் செல்லச்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் செல்லச்சாமி பணியில் இருந்த போது திருப்புவனம் பஜார் பகுதியில் இருந்து சிலர் பேருந்தில் ஏறியுள்ளனர். இதனை அடுத்து செல்லச்சாமியை அவர்கள் உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதனையடுத்து படுகாயமடைந்த செல்லச்சாமியை அருகில் […]
