படிக்கட்டில் பயணம் செய்ததை கண்டித்ததால் பள்ளி மாணவர்கள் கண்டக்டரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அண்ணா சதுக்கத்தில் இருந்து பெரம்பூருக்கு அரசு பேருந்து ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த பேருந்தின் படிக்கட்டில் தொங்கிய படி பயணம் செய்த பள்ளி மாணவர்களை கண்டக்டர் கார்த்திக் கண்டித்துள்ளார். இதனால் கோபமடைந்த மாணவர்கள் கார்த்திக் மீது கற்களை வீசி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனை அறிந்ததும் சக பேருந்து டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் ஓட்டேரி பகுதியில் ஆங்காங்கே சாலையின் […]
