பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கூடப்பாக்கம் 4வது பிளாக் பகுதியில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஜித் குமார் என்ற மகன் உள்ளார். இவர் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் மது போதைக்கு அடிமையாகி எப்போதும் மருந்து அருந்தி கொண்டே இருந்துள்ளார். இந்நிலையில் அவரது பெற்றோர் அஜித்குமாரை கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த அஜித்குமார் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். […]
