உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் முன்னாள் நீதிபதிகள் பேரணி நடத்தியது தீவினையானது என உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார். மத்திய தொழிலக பாதுகாப்புப் படையின் (சி.ஐ.எஸ்.எஃப்.) பாதுகாப்பை சென்னை உயர் நீதிமன்ற வளாகம் முழுமைக்கும் அமல்படுத்தக்கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, தியாகிகள் நாளையொட்டி சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நேற்று அமைதி ஊர்வலம் நடத்தப்பட்டதற்கு தலைமை நீதிபதி சாஹி கடும் கண்டனம் தெரிவித்தார். இதில் ஓய்வுபெற்ற நீதிபதிகள் ஹரிபரந்தாமன், கண்ணன் ஆகியோர் பங்கேற்றது வேதனையளிப்பதாகவும் […]
