Categories
சினிமா தமிழ் சினிமா

“கீழ்த்தரமான காலகட்டத்தில் வாழ்கிறோம்”.. கோபத்தோடு சாடிய நடிகர் ராஜ்கிரண்..!!

இப்படி ஒரு கீழ்த்தரமான காலகட்டத்தில் நாம் அனைவரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என நடிகர் ராஜ் கிரண் கடும்கோபத்தோடு பதிவிட்டிருக்கிறார். கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றுவதற்காக தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் அவர்களுக்காக இரவு, பகல் என்று பாராமல் அயராது பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள். இந்த நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவர் ஒருவர் உயிரிழந்தார். அவரின் உடலை அடக்கம் செய்ய விடாமல் பொது மக்கள் சிலர் தடுத்து பிரச்சனை செய்தனர். இச்செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘அமைச்சரின் பேச்சு அறியாமையைக் காட்டுகிறது’ – ஆ. ராசா கண்டனம்

திமுக உள்ளாட்சி அமைப்பிற்கு நிதி ஒதுக்க மாட்டோம் என்று அமைச்சர் கூறியுள்ளது அவரின் அறியாமையைக் காட்டுகிறது என ஆ. ராசா கண்டனம் தெரிவித்துள்ளார். நீலகிரி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பவானிசாகர் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிட்டு வென்ற திமுக கூட்டணி உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு திமுக சார்பில் சத்தியமங்கலத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் நீலகிரி மக்களவை உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ. ராசா பங்கேற்று பாராட்டுகளைத் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய ஆ.ராசா , […]

Categories
செய்திகள் மாநில செய்திகள்

விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்… “ஹைட்ரோ கார்பன் திட்டம்”… தமிழக அரசு அனுமதிக்கக்கூடுமா…

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்தினால், கிளர்ந்தெழுந்து போராடுவோம் என்று விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். விவசாயிகளை ஒடுக்கும் மத்திய அரசின் அறிவிப்பை, தமிழக அரசு ஏற்க்கக்கூடாது என்று  விவசாயிகள் சங்க தலைவர்கள்  வலியுறுத்தியுள்ளனர். மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெறாமல் விளைநிலங்களை எண்ணெய் எரிவாயு போன்ற எந்த ஒரு  திட்டங்களையும் செயல்படுத்த மாநில அரசு அனுமதிக்கக் கூடாது, என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த துடிக்கும் மத்திய அரசு எதிர்த்து வருகிற 27ம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

”அமெரிக்காவை வச்சு செய்யுங்க” இந்திய அரசே உடனே செய்யுங்க …..!!

ஈரான் ராணுவத் தளபதி கொல்லப்பட்டதற்கு இந்தியா, அமெரிக்காவுக்கு கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி ராஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்து கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயளாலர் டி ராஜா கூறுகையில், “அமெரிக்க ராணுவத்தால் ஈரான் ராணுவத் தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். அமெரிக்காவின் இந்தத் தாக்குதலால் கச்சா எண்ணெய் பெரும் உயர்வை சந்தித்துள்ளது. இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவைக்கு பெரும்பாலும் ஈரானையே சார்ந்துள்ளது. அமெரிக்காவின் இந்தத் தாக்குதல் இந்தியாவை பெரிதும் பாதிப்படையச் செய்திருக்கிறது. […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

”இந்தியாவுடன் தபால் சேவை கிடையாது” பாக் முடிவு ….. இந்தியா கண்டனம் …!!

இந்தியாவுடனான தபால் சேவையை எந்தவித முன்னறிவிப்புமின்றி பாகிஸ்தான் நிறுத்தியுள்ளதற்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 27ஆம் தேதிக்குப் பிறகு இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்ட எந்த தபால்களையும் அந்நாடு ஏற்கவில்லை. இந்தியாவிலிருந்து வரும் தபால்களையும், இந்தியாவுக்கு அனுப்ப வேண்டிய தபால்களையும் அந்நாடு நிறுத்தி வைத்ததையடுத்து, இந்திய தபால் துறை அலுவலர்களும் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டிய தபால்களை நிறுத்தி வைத்துள்ளனர். இது தொடர்பாக மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் டெல்லியில் செய்தியாளர்களிடம் […]

Categories
மாநில செய்திகள்

மேகதாதுவில் அணை : வைகோ , GK.வாசன் கண்டனம் ….!!

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகா அணை அமைக்க அனுமதிக்க கூடாது என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் காவிரி நீர் பங்கீடு தொடர்பாக 1892 மற்றும் 1924-ம் ஆண்டுகளில் மைசூர் மாகாணத்துக்கும் , சென்னை மாகாணத்திற்கும் போடப்பட்ட ஒப்பந்தம் திட்டமிட்ட விதிகளை வகுத்து உள்ளதாக குறிப்பிட்டார். காவிரியின் குறுக்கே அணை கட்ட விரும்பினால் கர்நாடக அரசும் தமிழகத்திடம் அனுமதி பெற வேண்டும்.என 1892 ஆம் […]

Categories
மாநில செய்திகள்

”சூர்யாவின் பேச்சு வன்முறையை தூண்டுகின்றது” H ராஜா கண்டனம்…!!

நடிகர் சூர்யாவின் பேச்சு வன்முறையை தூண்டும் வகையில் உள்ளது என்று பாஜகவின் தேசிய செயலாளர் H.ராஜா தெரிவித்துள்ளார். நடிகர் சூர்யா நடத்தும் அகரம் பவுண்டேசன் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய சூர்யா புதிய கவ்விக் கொள்கை குறித்தும் , நீட் தேர்வு குறித்தும் விமர்சனம் செய்தார்.மேலும் , புதிய கல்விக் கொள்கை வரைவு குறித்து பெரும்பாலான மாணவர்கள், பெற்றோர்களுக்கு தெரியவில்லை. பெரும்பாலானோர் புதிய கல்விக்கொள்கை வரைவு குறித்து பேசாதது வருத்தமளிக்கிறது. அனைவரும் அமைதியாக இருந்தால் புதிய கல்விக்கொள்கை வரைவு […]

Categories

Tech |