ஈரோடு மாவட்டத்தில் உள்ள சங்கராபாளையம் ஆர்.ஜி.கே புதூர் பகுதியில் விவசாயியான முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எனது தாய் புஷ்பா, மனைவி கீர்த்திகா(29) ஆகியோர் நேற்று முன்தினம் எங்களுக்கு சொந்தமான தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது எங்கள் பகுதியில் வசிக்கும் 7 பேர் கொண்ட கும்பல் தோட்டத்திற்குள் நுழைந்து எனது மனைவி மற்றும் தாய் முகத்தில் மயக்க மருந்து தெளித்து […]
