இளவட்டக்கல் தூக்கும் போட்டியில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் மங்காபுரம் பகுதியில் பொங்கல் திருவிழாவையொட்டி ஆண்டுதோறும் இளவட்டக்கல் தூக்கும் போட்டி நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டு சமுதாய நல்லிணக்க பேரவை மற்றும் சேவாபாரதி சார்பில் இளவட்ட கல்லை தூக்கும் போட்டி நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் சமுதாய நல்லிணக்க பேரவையை சேர்ந்த சிவலிங்கம், தங்கராஜ், கோபால கிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்நிலையில் 68 முதல் 88 கிலோ வரை எடையுள்ள இளவட்ட […]
